Search This Blog

Thursday, August 15, 2024

WK01-16 Aug 24 Principal Update To Teachers

அன்புள்ள ஆசிரியர்களுக்கு,

நமது அவ்வை தமிழ்ப் பள்ளி 2024-25-க்கான வகுப்பு 16 ஆகஸ்ட் 24 அன்று (மலை 6 - 7:45) தொடங்குகிறது.  EBE பள்ளியில் தொடங்க சில ஒப்புதல்கள் தாமதமானதால் முதல் வகுப்பை அந்தந்த ஆசிரியரின் வீட்டில் நடத்த கேட்டுக் கொள்கிறோம். உங்கள் வகுப்பிற்கான whatsapp -ல் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கவும். 

கடைசி நேர மாற்றம்:

EBE பள்ளி இன்றுமுதல் (16 ஆகஸ்ட் 24 ) தமிழ் வகுப்பை, EBE பள்ளியிலேயே நடத்த ஒப்புதல் கொடுத்ததால், இன்றுமுதல் BE பள்ளியிலேயே நடக்கும்.  பெற்றோர் தங்களது குழந்தையை விட்டுவிட்டு, PCF & SMCF  கையெப்பம் இட்டு, பின்னர்  7:45க்கு அழைத்து மாணாக்கரை அழைத்துச்செல்ல வரசொல்லவும்.

தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பணியில் ஆர்வமுடன் அனைவரும் இருப்பதால் இதைப்போல சிறு சிறு மாற்றங்களை / இடைஞ்சல்களை பொறுத்து, பள்ளி நன்றாக நடக்க உதவுவதற்கு நன்றி

போன வருடம் போலவே இந்த வருடமும் நாம் Sacramento பள்ளியின் உதவியுடன் நடத்துவதால், புத்தகங்கள் கிடைக்க அவர்களுக்கு தாமதம் ஆகின்றது - அவர்களுக்கு கிடைத்தவுடன் நமக்கு அனுப்புவார்கள்.  போன வருட புத்தகங்களை ஆசிரியர்கள் தற்போதைய ஆசிரியர்களுக்கு கொடுத்தால் உதவியாக இருக்கும்.

இந்தவருடம் blog posting முதல் வாரத்தில் இருந்து வகுப்பிலேயே முடித்து விடவும்.  ஏதாவது சந்தேகம் என்றால் தயவு செய்து சங்கடப்படாமல் தொடர்பு கொள்ளவும்.

பெற்றோர்கள் தேவையான Forms அனுப்ப சொல்லவும். மேலும் விவரங்களுக்கு atpc-parents-info.html

 

நன்றி


No comments:

Post a Comment