Search This Blog

Showing posts with label Teacher. Show all posts
Showing posts with label Teacher. Show all posts

Friday, May 16, 2025

WK32T-16 May 24 – Principal Update to All

 

அனைவருக்கும் வணக்கம்!

 

இன்று நமது தமிழ்ப் பள்ளிக்கான இறுதித் தேர்வு. மாணவர்களை நன்றாகத் தேர்வு எழுத ஊக்குவிக்கவும். வினாத்தாளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், தெளிவுபடுத்த ஆசிரியரை அணுகுமாறு தெரிவிக்கவும்.

 

 

Greetings!

 

Today is the final test for our Tamil School.  Please encourage students to write the exam well.  If they have any doubt on question paper, please inform to approach the teach for clarification.

 

 

இன்று 2024-25 கல்வியாண்டிற்கான கடைசி நாள் - அடுத்த வகுப்பு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் மாணாக்கர்கள் படித்ததை மறக்காமல் இருக்கவும், படித்ததை மேலும் தெளிவாக கற்றுக் கொள்ளவும் மாணவர்களை வகுப்பு வலைப்பதிவு (Blog) உள்ளடக்கத்தைப் படிக்க ஊக்குவிக்க பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

And Today is the last day for 2024-25 Academic Year.   The next class will be in August.  Parents are requested to motivate students to read the class blog content to keep in touch with Tamil

நன்றி

 

அன்புடன்,

பூவேந்திரன்

முதல்வர்

Thank You,

 

Poovendran

Principal

Thursday, December 26, 2024

WK16H-27 Dec 24 – Principal Update to All

 

அனைவருக்கும் வணக்கம்!

 

2024-ன் கடைசி வாரத்தில் நாம் இருக்கிறோம்.  அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

Greetings!

 

We are in the last week of 2024.  New Year Greetings to All.

 

நினைவூட்டல்:-  ஏற்கனவே சொன்னதுபோல பள்ளி சாராத கவிதை, கட்டுரை, படங்கள் என உங்கள் கற்பனைக்கும், படைப்பாற்றலுக்கும் ஒரு நல்ல வழி உண்டு.  உங்கள் படைப்புகளை muthukkal@tamilpalli.org -கு  அனுப்பவும்

Reminder: As already informed, please send your creativities like Poems, Articles, Pictures etc to muthukkal@tamilpalli.org

நன்றி

 

அன்புடன்,

பூவேந்திரன்
முதல்வர்

Thank You,

 

Poovendran
Principal

Friday, November 22, 2024

WK13C -22 Nov 24 – Principal Update to Teachers

 மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,

நமது பள்ளியின் தீபாவளி மலர் படிக்க இங்கே சொடுக்கவும்.

நன்றி,

அன்புடன்

பூவேந்திரன்

Thursday, November 14, 2024

WK12T -15 Nov 24 – Principal Update to Teachers

 மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,

14 Nov - இந்தியாவில் குழந்தைகள் தினம் - மாண்புக்குரிய  நேருவின் பிறந்தநாள் - நேரம் கிடைக்கும்போது குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்துங்கள்!

வரும் வகுப்பில் மாணவர்களுக்கு தேர்வு பயப்படும்படியாக இல்லாமல்,  நன்றாக எழுத உதவுங்கள் 

நன்றி,

அன்புடன்

பூவேந்திரன்

Thursday, November 7, 2024

WK11 -08 Nov 24 – Principal Update to Teachers

 மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,

உங்களின் ஆர்வமே  நமது பள்ளியை நல்ல எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்கிறது. உங்களின் கருத்துக்களை நமது மாதாந்திர ஆலோசனை  கலந்துரையாடலில் தெரிவியுங்கள்.

WK11-08 Nov 24 – Principal Update to Parents

நன்றி,

அன்புடன்

பூவேந்திரன்

Thursday, October 24, 2024

WK10 -25 Oct 24 – Principal Update to Teachers

 

மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,

தீபாவளி பள்ளி நிகழ்சிக்காக  பெரும்பாலோர் ஈடுபட்டு இருப்பீர்கள். நன்றாக வர வாழ்த்துக்கள்.

 

 நமது பள்ளியின் முத்திரையை அழகாக வடிவமைத்தது தந்த விக்ரம் அவர்களுக்கு பள்ளி சார்பில் நன்றி.  முத்திரையை இங்கே: 

 


இந்தவாரம் மற்றவர்களுக்கு அனுப்பிய எனது செய்தியையும் பார்த்துவிடவும்.

Principal Update to Parents

Principal Update to Volunteers:

 

நன்றி,

அன்புடன்

பூவேந்திரன்

Thursday, October 10, 2024

WK09-11 Oct 24 – Principal Update to Teachers

 

மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,

மாணாக்கர்களிடம் தீபாவளி நிகழ்ச்சியில் எப்படி பங்கேற்கலாம் என்பதை பற்றி பேசுங்கள் - அவர்கள் கற்பனைத்திறனுக்கு முன்னுரிமை கொடுங்கள்

 

இந்தவாரம் மற்றவர்களுக்கு அனுப்பிய எனது செய்தியையும் பார்த்துவிடவும்.

Principal Update to Parents

 

நன்றி,

அன்புடன்

பூவேந்திரன்

Thursday, October 3, 2024

WK08-04 Oct 24 – Principal Update to Teachers

மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,

இன்னும் சிலருக்கு ப்லோக் சரியாகவில்லை என தெரிகிறது.  சம்பந்தப்பட்டபவர்களிடம் தொடர்பு கொள்ளவும்

ஆசிரியர்களின் மாதாந்திர கூட்டம் (Online) முதல் வியாழன் இரவு 9-10 pm   நடக்கும்.  அன்று நடந்த முதல் கூட்டத்தில் கலந்துகொண்டு உங்களின் கருத்துக்களை கூறியதற்கு நன்றி.  உங்கள் கருத்துக்கள்தான் பள்ளி மென்மேலும் தரத்தில் மெருகூட்ட பயன்படும்.

இந்தவாரம் மற்றவர்களுக்கு அனுப்பிய எனது செய்தியையும் பார்த்துவிடவும்.

Principal Update to Parents

 நன்றி,
அன்புடன்
பூவேந்திரன்

Thursday, September 26, 2024

WK07-27 Sep 24 – Principal Update to Teachers

 மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,

ITA, Blog  சம்பந்தமான அனைத்து  விஷயங்களும் சரியாகி விட்டதா?  இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு சரிசெய்யவும். 

இந்தவாரம் மற்றவர்களுக்கு அனுப்பிய எனது செய்தியையும் பார்த்துவிடவும்.

Principal Update to Parents

 நன்றி,

அன்புடன்

பூவேந்திரன்

Friday, September 20, 2024

WK06-20 Sep 24 – Principal Update to Teachers

 மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,

அடுத்த வாரத்திற்குள் ITA, Blog  சம்பந்தமான அனைத்து  விஷயங்களும் சரியாக வேண்டும். நான் அல்லது துணை முதல்வர் தொடர்பு  கொள்கிறோம். 

இந்தவாரம் மற்றவர்களுக்கு அனுப்பிய எனது செய்தியையும் பார்த்துவிடவும்.

Principal Update to Parents

Principal Update to Volunteers

 

நன்றி,

அன்புடன்

பூவேந்திரன்

Friday, September 13, 2024

WK05-13 Sep 24 – Principal Update to Teachers

 

மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,

இங்கும் அங்குமாக கேட்ட "மாற்றம் ஒன்றே மாறாதது" - நமக்கும்வந்துவிட்டது.  பள்ளி மாற்றம், அதனால் பள்ளி பெயர் மாற்றம், பெயர் மாற்றத்தால் blog மாற்றம், கூடவே மின்னஞ்சல் மாற்றம்.

இத்தனை மாற்றங்களுக்கும் முகம் சுழிக்காமல் தங்களை தாங்களே புதிப்பித்துக் கொண்டு உடனுக்குடன் செயலாற்றும் உங்களுக்கு நன்றி!

21 Sep 24 தன்னார்வலர் கூட்டத்திற்கு வரவும்.  ஆசிரியர்கள் நாம் வாரம் வாரம் நேரடியாக சந்திக்கிறோம் - விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம்.  ஆகவே ஆசிரியராக உங்களுக்கு இருக்கும் விஷயங்களை ஆசிரியர் கூட்டத்திலோ அல்லது என்னிடம் நேரிலோ சொல்லவும்.  இந்த கூட்டம் ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கு விட்டுவிடுவோம்.

இந்தவாரம் மற்றவர்களுக்கு அனுப்பிய எனது செய்தியையும் பார்த்துவிடவும்.

PrincipalUpdate to Parents

PrincipalUpdate to Volunteers

PrincipalUpdate to All

நன்றி,

அன்புடன்

பூவேந்திரன்

WK05-13 Sep 24 – Principal Update to All

 

அனைவருக்கும் வணக்கம்!

 

விளையாட்டு வெற்றி விழா 21 Sep 24-ல் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது.  ஒருசில நாட்களில் அழைப்பிதழ் whatsapp -ல் வரும்.  அனைவரும் கலந்து கொண்டு மாணாக்கர்களையும், ஆசிரியர்களையும், சிறப்பாக நடக்க உதவிய அனைவரையும் ஊக்கப்படுத்துங்கள்.

Greetings!

 

Sports Award celebration scheduled on 21 Sep 24.  The invitation will be sent through WhatsApp groups. All are welcome with your family and friends to enjoy and encourage them.

பெயர் மாற்றம் தொடர்பாக அனைத்து வேலைகளும் இன்னும் முடியவில்லை.  ITA இணையதளத்தில் சில பிரச்சனைகள் வரலாம்.  வந்தால் சொல்லவும் - ஒரு சில வாரங்களில் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வோம்.

Still ongoing tasks yet to be completed regarding name change with ITA.  It will be sorted out in couple of weeks.

நன்றி

 

அன்புடன்,

பூவேந்திரன்

முதல்வர்

Thank You,

 

Poovendran

Principal

Friday, September 6, 2024

WK04-06 Sep 24 Principal Update To Teachers

 

மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,

வகுப்பை நன்றாக நடத்துகிறீர்கள்.  பெற்றோர் சார்பாக நன்றி.

Blog - அனைவரும் போனவாரம் பதிவிட்டு உள்ளீர்கள்.  இந்த வாரத்தில் இருந்து வகுப்பின் முடிவில் வகுப்பிலேயே முடித்து விடவும்.  உதவி தேவை எனில் அணுகவும்.

கடந்த வார நடத்தை :போன வகுப்பில் நன்றாக, சத்தமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடினீர்கள்.  நன்றி !!  மாணாக்கர்களிடம் பேசும்போது எப்போதும் சிரித்த முகத்துடனும், அன்புடனும் பேசினீர்கள்.

இந்த வாரமும் கடைப்பிடிப்போம்

 

விளையாட்டு போட்டி, மாதாந்திர தேர்வு, ஆசிரியரை கௌரவிப்போம் மற்றும் பல ...பெற்றோருக்கான பதிவை பார்க்கவும்.

நன்றி,

அன்புடன்

பூவேந்திரன்

Saturday, August 31, 2024

Principal Update on 31 Aug 24

 

அனைவருக்கும் வணக்கம்!



மாணவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 30 வந்துவிட்டதால், ITA சில வரம்புகளுடன் நமக்கென தனியாக பள்ளி நடத்த அனுமதி அளித்துள்ளது.  இந்த முக்கியமான நகர்வுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.   நாம் இனிமேல் "அவ்வை தமிழ் பள்ளி" என்ற பெயரில் இயங்க முடியாது.  நமது புதிய பெயர் "சாட்டனூகா தமிழ்ப் பள்ளி".


நேற்று இதைப்பற்றி நாம் பள்ளியில் பேசினோம் - பலருக்கு தெரிந்து இருக்கும்.


இந்த மாற்றத்தினால் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ITA இணையதளத்தில் சில பிரச்சனைகள் வரலாம்.  வந்தால் சொல்லவும் - ஒரு சில வாரங்களில் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வோம்.


ஆசிரியர்களுக்கு:  மாணாக்கர்களின் வருகைப்பதிவேடு, மதிப்பெண்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.  திரும்பவும் நாம் பதிவிட வேண்டி வரலாம். 


முக்கியமாக நமது பள்ளி கால அட்டவணை மாறலாம் அதைப்பற்றி பள்ளி மாறுதல் வேலை அனைத்தயும் முடிந்தவுடன் தெரியப்படுத்துகிறோம்


எதிர்பாராத இடைஞ்சளுக்கு வருந்துகிறோம்.


நன்றி 


அன்புடன், 

பூவேந்திரன்

முதல்வர்

All,


Good News:  As we have nearly 30 Students, we approached ITA (International Tamil Academy)  for our own branch.  ITA approved with some conditions.  Main condition is we cant’ run our school in the name of “Avvai Tamil Palli”, so our school name is “Chattanooga Tamil Palli’.  We discussed in our school  yesterday (30th.) most of the people who came to school knows this.  


Student,  Teacher and volunteers may have issues in catamilacademy.org either signin or missing kids name or some errors.  


Parents:   If you  are facing any issue, dont panic, please let us know and it will be sorted out soon.


Teachers:  Please note down the marks in other source apart from ITA website.  We may need all weeks log, attendence info to fill again in our school


Particularly, there will be a change in school calendar.  Our Team will inform the updated calendar once the transition is copmpleted


Sorry for the inconvenience caused to you.


Thank You

Poovendran 

Principal

Thursday, August 29, 2024

WK03-30 Aug 24 Principal Update To Teachers

 மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,

உங்களின் அன்பான உதவியால் வீட்டுப்பாடங்களை நன்றாக மாணாக்கர்கள் செய்கிறார்கள்.  பெற்றோர்களையும், மாணாக்கர்களையும் பாராட்டுங்கள்.

கண்டிப்பாக செய்யவேண்டியவை:  கடந்த இரண்டுவாரங்களுக்கான blog முடித்து விட்டீர்களா?  வாராந்திர விசயங்களை பள்ளியிலேயே "blogspot " -ல்  போடவேண்டும்.  அந்த இணைய தொடர்பை whatsapp-ல் பகிரவேண்டும்.  

8/24 விளையாட்டுப் போட்டியை நன்றாக நடத்த உதவிய, ஆர்வமுடன் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி.  வென்றவர்களுக்கு பாராட்டுக்கள். 

செப் 5, ஆசிரியர் தினம்.  வகுப்பில் மாணாக்கர்களுக்கு ஆசிரியர் தினம் பற்றி சொல்லுங்கள்.  யாராவது ஆசிரியர் தினம் பற்றி பேச விரும்பினால் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின் பேசலாம்.  முன்னரே நமது  whatspp குழுவில் தகவல் சொல்லுங்கள்  - அடுத்த வாரமும் பேசலாம் 

பணிவான வேண்டுகோள் : போன வகுப்பில் நன்றாக, சத்தமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடினீர்கள்.  நன்றி !!  மாணாக்கர்களிடம் பேசும்போது எப்போதும் சிரித்த முகத்துடனும், அன்புடனும் பேசுவோம்.

Please see Parents weekly update 

நன்றி,

அன்புடன் 

பூவேந்திரன்


Friday, August 23, 2024

WK02-23 Aug 24 Principal Update To Teachers

மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,

முதல் வாரத்திலேயே உங்களின் ஆர்வமும், செயலாற்றும் விதமும் நன்றாக உள்ளது.  உங்களின் ஈடுபாட்டால் கண்டிப்பாக நமது பள்ளி இந்த வருட கடைசியில் நல்ல பள்ளியாக இருக்கும்.

கண்டிப்பாக செய்யவேண்டியவை:  வாராந்திர விசயங்களை பள்ளியிலேயே "blogspot " -ல்  போடவேண்டும்.  அந்த இணைய தொடர்பை whatsapp-ல் பகிரவேண்டும்.

பணிவான வேண்டுகோள் : தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, நீங்களும் சத்தமாகப் பாடினால் மாணாக்கர்களுக்கு எளிதில் மனப்பாடம் ஆகிவிடும்.  மாணாக்கர்களிடம் பேசும்போது எப்போதும் சிரித்த முகத்துடனும், அன்புடனும் பேசுவோம்.

தமிழ் நன்றாக பேசும் ஒரு சமுதாயத்தை சாட்டணூகாவில் உருவாக்க நாம் அனைவரும் ஒருமித்து சிந்திப்போம், உழைப்போம்.

Please see Parents weekly update

நன்றி,

அன்புடன்

பூவேந்திரன்