மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,
உங்களின் அன்பான உதவியால் வீட்டுப்பாடங்களை நன்றாக மாணாக்கர்கள் செய்கிறார்கள். பெற்றோர்களையும், மாணாக்கர்களையும் பாராட்டுங்கள்.
கண்டிப்பாக செய்யவேண்டியவை: கடந்த இரண்டுவாரங்களுக்கான blog முடித்து விட்டீர்களா? வாராந்திர விசயங்களை பள்ளியிலேயே "blogspot " -ல் போடவேண்டும். அந்த இணைய தொடர்பை whatsapp-ல் பகிரவேண்டும்.
8/24 விளையாட்டுப் போட்டியை நன்றாக நடத்த உதவிய, ஆர்வமுடன் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி. வென்றவர்களுக்கு பாராட்டுக்கள்.
செப் 5, ஆசிரியர் தினம். வகுப்பில் மாணாக்கர்களுக்கு ஆசிரியர் தினம் பற்றி சொல்லுங்கள். யாராவது ஆசிரியர் தினம் பற்றி பேச விரும்பினால் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின் பேசலாம். முன்னரே நமது whatspp குழுவில் தகவல் சொல்லுங்கள் - அடுத்த வாரமும் பேசலாம்
பணிவான வேண்டுகோள் : போன வகுப்பில் நன்றாக, சத்தமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடினீர்கள். நன்றி !! மாணாக்கர்களிடம் பேசும்போது எப்போதும் சிரித்த முகத்துடனும், அன்புடனும் பேசுவோம்.
Please see Parents weekly update
நன்றி,
அன்புடன்
பூவேந்திரன்
No comments:
Post a Comment