மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,
முதல் வாரத்திலேயே உங்களின்
ஆர்வமும், செயலாற்றும் விதமும்
நன்றாக உள்ளது. உங்களின் ஈடுபாட்டால் கண்டிப்பாக
நமது பள்ளி இந்த வருட கடைசியில் நல்ல பள்ளியாக இருக்கும்.
கண்டிப்பாக செய்யவேண்டியவை: வாராந்திர விசயங்களை பள்ளியிலேயே "blogspot " -ல் போடவேண்டும்.
அந்த இணைய தொடர்பை whatsapp-ல் பகிரவேண்டும்.
பணிவான வேண்டுகோள்
: தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, நீங்களும் சத்தமாகப் பாடினால் மாணாக்கர்களுக்கு எளிதில் மனப்பாடம் ஆகிவிடும்.
மாணாக்கர்களிடம் பேசும்போது எப்போதும் சிரித்த
முகத்துடனும், அன்புடனும்
பேசுவோம்.
தமிழ் நன்றாக பேசும்
ஒரு சமுதாயத்தை சாட்டணூகாவில் உருவாக்க நாம் அனைவரும் ஒருமித்து சிந்திப்போம், உழைப்போம்.
Please see Parents weekly
update
நன்றி,
அன்புடன்
பூவேந்திரன்
No comments:
Post a Comment