வணக்கம்.
கடந்த சில நாட்களாக விக்ரம் விளையாட்டு நிகழ்ச்சிக்காக திட்டம் தீட்டியும், மாணாக்கர்களுக்கு பயிற்சியும், ஒருங்கிணைத்தும் நன்றாக விளையாட்டு விழாவை நடத்த உழைத்துள்ளார். அவருக்கு அனைவரின் சார்பாக நன்றி.
நாளை, விளையாட்டு விழாவில் சண்முகம் புகைப்படம் எடுப்பார், அவருக்கு துணையாக புகைப்படம் எடுக்கவும், நிழற்படம் எடுக்கவும் உங்கள் உதவி தேவை. பொறுப்பேற்றுக்கொள்பவர்கள் சொல்லவும்.
ஆசிரியர் அல்லாத தன்னாலர்வர்களும் பள்ளிக்கு வருவது புதிய விஷயங்கள் செய்வதற்கும், ஆசிரியர்கள் வார நிகழ்வுகளை பதிவு பண்ணும்போது மாணாக்கர்களை பார்த்துக் கொள்ளவும், புதிதாக வந்திருக்கும் சிறுவயது மாணாக்கர்களை சமாளிப்பதற்கும் உதவியாக இருக்கும்.
எப்போதாவது விடுமுறை தேவைப்பட்டால் இந்த குழுவில் முன்னரே சொல்லிவிடுவது ஒரு நல்ல பழக்கத்திற்கு வித்திடும்.
பள்ளியில் மாணாக்கர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வருகைப் பதிவு எடுப்பது போல தன்னார்வலர்கள் அனைவருக்கும் எடுக்கப்படும்.
பள்ளிக்காக தங்கள் நேரத்தை செலவிடும் அனைவருக்கும் நன்றி.
அன்புடன்
பூவேந்திரன்
No comments:
Post a Comment